ஏழரை சனி - ஒரு பார்வை
ஒருவருடைய ஜாதகத்தில் சனி உச்சம் பெற்றுறிருந்தால் 71/2 சனி
பாதிப்பு ஏற்படாது .
ஒருவரது ஜாதகத்தில் சனி மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றாலும்
71/2 சனி கெடுதல் செய்யாது .
ஜனன காலத்தில் ஜன்ம லக்னத்திற்கு 3,6,10,11-ல் சனி அமர்ந்தாலும் 71/2 சனி
கெடுதல் செய்யாது .
மகரம் அல்லது கும்ப லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனியும் லக்னத்தில்
இருந்தால் 71/2 சனியும் கெடுதல் செய்யாது , தவிர அவருக்கு சுகமான
வாழ்வு கிட்டும் .
சனி உச்சம் பெற்று துலா ராசியில் இருந்தால் அது கேந்திரம் அல்லது
திரிகோணம் என்று இருந்தால் அவருக்கு வெற்றி மேல் வெற்றி , சுக வாழ்வு ,
உயர் பதவி ,உல்லாச வாழ்க்கை என்ற அனைத்தும் கிட்டும்..
(கேந்திரம் என்பது 1,4,7,10 -ம் இடங்கள்
திரிகோணம் என்பது 1,5,9-ம் இடங்கள்)
மேஷத்தில் சனி நீசம் பெற்று,வக்கிரமும் பெற்று குரு பார்வை பெற்றால்
நீச பங்க ராஜயோகம் -வாழ்வு சிறக்கும் என்கிறது ஜோதிடம்.
பொதுவாக சில
ஜாதகம் வலுவாக இருந்து கோச்சாரப்படி சனி பெயர்ச்சி வலுவாக
இருந்தால் உயர் பலன்கள் கிடைக்கும் .
ஜாதகம் வலுவாக இருந்து கோச்சாரப்படி சனி பெயர்ச்சி வலு இல்லாவிடில்
சுமாரான பலன் கிடைக்கும்.
ஜாதகத்தில் சனியும் கெட்டு கோசாரத்தில் சனியும் கெட்டு இருந்தால்
கெடுதலான பலன்கள் கிடைக்கும்.
ஜாதகத்தில் சனியும் கெட்டு கோசாரத்தில் சனி வலுவுடன் இருந்தால்
கெடு பலன்கள் இருக்காது ,சுமாரான பலன்கள் கிடைக்கும்.
சனி கோச்சாரப்படி நன்மை தரும் ஸ்தானங்கள்
ஜன்ம ராசிக்கு 3,6,11-ல் சனி சஞ்சரிக்கும் காலம் நன்மையான காலம் .
சுகபோகங்களை அள்ளி தருவார் .
3-ம் இடத்தில சனி சஞ்சரிக்கும் காலம் கை விட்டுப்போன பொருள்
கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும் .பண வரவு பெருகும் ,நூதன
பொருட்கள் ,வாகனங்கள் வாங்கலாம் .புதிய தொழில் அமையும்.
இல்லறம் இனிக்கும்.
6-ம் இடத்தில சனி சஞ்சரிக்கும் காலம் ,எதிரிகள் மறைவர் ,நோயிலிருந்து
விடுபடலாம் .கடன் தொல்லை தீரும் .தனம் பெருகும் .உத்தியோக உயர்வு
கிட்டும் .தூர தேச பயணம் வெற்றியாகும் .
11-ம் இடத்தில சனி சஞ்சரிக்கும் காலம் ,பாக்கியம் கூடும் ,திருமணம்
கைகூடும் .சகோதர உறவு நெருக்கம் ஏற்படும் .அவர்களால் பண உதவி
கிட்டும். தன லாபம் ஏற்படும்.
_______________________________________
P.S :-.Comments from readers invited for betterment

No comments:
Post a Comment