சுலப வழியில் திருமணப்பொருத்தம்-10
பொருத்தம்-10
இனி அடுத்த பொருத்தம் நாடி பொருத்தம் என்ன எப்படி என்று பார்ப்போம்.
27 நக்ஷத்திரங்களும் 3 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவை முறையே
இடது நாடி ,வலது நாடி ,மத்யம நாடி என்பவையாகும். இவற்றில் ஆண் ,
பெண் இருவருக்கும் ஒரே நாடி என்றால் பொருத்தம் இல்லை. எனவே
இருவருக்கும் ஒரே நாடியாகில் ஜாதகங்களை சேர்க்க கூடாது.இந்த நாடி
பொருத்தம் இல்லை என்றால் ரஜ்ஜுபொருத்தம் கண்டிப்பாக
இருக்கவேண்டும்.நாடி ரஜ்ஜு என்ற இரண்டு பொருத்தமும் இல்லை என்றால்
கண்டிப்பாக அந்த ஜாதகங்களை சேர்க்க கூடாது..
எந்தெந்த நக்ஷத்திரங்கள் எந்தெந்த நாடி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள
அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்வோம் .
இடது நாடி நக்ஷத்திரங்கள் :-
----------------------------------------------- அஸ்வினி,திருவாதிரை,புனர்வசு,உத்திரம் ,
ஹஸ்தம்,கேட்டை,மூலம், சதயம், பூரட்டாதி .
மத்யம நாடி நக்ஷத்திரங்கள் :-
--------------------------------------------------- பரணி,மிருகசீரிஷம்,பூசம்,பூரம்,சித்திரை ,
அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி
வலது நாடி நக்ஷத்திரங்கள்:-
------------------------------------------------- கார்த்திகை,ரோகிணி ,ஆயில்யம்,மகம்,
சுவாதி ,விசாகம்,உத்திராடம் ,திருவோணம், ரேவதி .
ரோகிணி ,மிருகசீரிஷம்,திருவாதிரை,பூசம்,விசாகம்,திருவோணம்,
உத்திரட்டாதி,ரேவதி -இந்த 9 நக்ஷத்திரங்களுக்கும் ஆண் ,பெண்
இருவருக்கும் ஒரே நாடியகில் தோஷமில்லை அவ்விரு ஜாதகங்களை
சேர்க்கலாம் என்பது ஒரு சிலர் கருத்து .
இதுவரை நாம் 10 வித பொருத்தங்கள் பற்றி பார்த்தோம்.இவைகள்
தவிர இன்னும் 2 பொருத்தங்கள் உள்ளது.அவைகள் என்ன, எப்படி
பார்க்க வேண்டும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .
10 பொருத்தங்களில் முக்கியமான பொருத்தங்கள் என்று
சொல்லபடுபவை தினப்பொருத்தம் ,யோனிப்பொருத்தம்,
ரஜ்ஜு பொருத்தம்,கணப்பொருத்தம் ,ராசிப்பொருத்தம்
ஆகியவையாகும் . இவைகள் அவசியம் பொருந்தி இருக்க
வேண்டும். இல்லையெனில் பொருத்தம் இல்லை என்று சொல்லலாம்.
பின் குறிப்பு :-
வாசகர்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை
தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
________________________