Friday, December 21, 2012

சுலப வழியில் திருமண பொருத்தம்-6

                                            சுலப வழியில் திருமண பொருத்தம்

பொருத்தம்-6

                 
                அடுத்து  நாம் பார்க்க போகிற  இரண்டு பொருத்தங்களும்  மிக

முக்கியமானவை. அவை   ராசிப்பொருத்தம் ,ராசியாதிபதி  என்பவையாகும் .

முதலில்  ராசிப்பொருத்தம்  பற்றி  பார்ப்போம் .

பெண்  ராசியிலிருந்து  எண்ணும்  பொழுது ஆண்  ராசி 6-க்கு  மேல்  இருந்தால்

உத்தமம்.

ராசி என்பது ஜனன காலத்தில்  ஒருவருடைய  ஜாதகத்தில்  சந்திரன்  எங்கு

இருக்கிறாரோ  அதுவே  அவருடைய ராசி  என்று சொல்லப்படும் .

பெண் ராசிக்கு ஆண்  ராசி 7-வதாக  இருந்தால்  அது விசேஷமான  பலனை

கொடுக்கும் என்பதால்  அதை  உத்தமம் என்று  சொல்லப்படும்.

பெண் ராசியும்  ஆண்  ராசியும்  ஒரே  ராசியானால்  உத்தமம்.

பெண் ராசிக்கு  ஆண்  ராசி 2-5-6 ஆக  வந்தால் பொருந்தாது.

பெண் ராசிக்கு  ஆண்  ராசி  3-4 ஆக  வந்தால்  சமம் அல்லது மத்யமம்.

1-7-8-9-10-11-12 ஆக  வருமானால் பொருத்தம் உள்ளது.

பெண் ராசிக்கு   ஆண்  ராசி 5 ஆக  வந்தால்  மாங்கல்ய பலம் குறைவு.

6-ஆக வந்தால் குழந்தை செல்வம் குறைவு.

7-ஆக வந்தால் நலம். அதை சம சப்தமம் ,நல்ல பொருத்தம் என்பார்கள்.

அதிலும்  சேர்க்க கூடாதது  இருக்கிறது அதை கீழே பார்ப்போம் .

9-ஆக வந்தால் மாங்கல்ய பலம் அதிகம்.

10-ஆக வந்தால் பொருள் லாபம் ஏற்படும்.

11-ஆக வந்தால் மகிழ்ச்சி  கூடும்.

12- ஆக வந்தால் நீண்ட ஆயுள் ,ஆரோக்கியம் .

பெண் ராசி முதல் ஆண்  ராசி வரை எண்ணினால் பெண் ராசிக்கு

ஆண்  ராசி ,

                                 2-12    என்றால்   மிருத்தியு  கூடாது .

                                 12-2    என்றால்  ஆயுள்  கூடும்-உத்தமம்.

                                  3-11    என்றால் துக்கம்  கூடாது.

                                  11-3    என்றால் சுகம் -உத்தமம்.

                                   4-10   என்றால் தரித்ரம்  தவிர்க்கவும் .

                                  10-4    என்றால்   தன  சேர்க்கை  உத்தமம்.

                                   6-8      என்றால்  புத்திர நாசம் -தவிர்க்கவும்.

                                    8-6      என்றால்  புத்திர லாபம்  உத்தமம்.

                                    7-7      என்றால்  சம சப்தமம்  உத்தமம்.

2-12 -ஆவதாக வருவதில் பெண் ராசிக்கு ஆண்  ராசி  மேஷம்,மிதுனம்,

சிம்மம்,துலாம்,தனுசு  2- வதாகில் தோஷமில்லை.

பெண் ராசிக்கு ஆண் ராசி  6-வதாக வந்தால் அதை  சஷ்டாஷ்டகம்

என்பார்கள்.

அதிலும் பெண் ராசிக்கு ஆண்  ராசி  ரிஷபம்,கடகம்,கன்னி, விருச்சிகம் ,

மகரம், மீனம்  ஆகியவைகள்  6- வது ராசியாகில்  அதை சுப சஷ்டாஷ்டகம்

சேர்க்கலாம் என்பது சிலர்  கருத்து.

இது போல் பெண் ராசிக்கு ஆண்  ராசி  8-வதாக  வந்தால்  அதை

அஷ்டசஷ்டகம்  என்பார்கள்.

இதிலும் பெண் ராசிக்கு ஆண்  ராசி மேஷம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,.

கும்பம்  ஆகியவைகள் 8-வது  ராசியாகில்  அதை  சுகாஷ்டசஷ்டகம்

சேர்க்கலாம் என்பது சிலர்  கருத்து .

சேர்க்க கூடாத  சஷ்டாஷ்டகம்  பின்வருமாறு :

                                கடகம்            ---       தனுசு

                               விருச்சிகம்   ---       மேஷம்
   
                               கன்னி             ---         கும்பம்

                               ரிஷபம்           ---          துலாம்
                     
                               மகரம்              ---           மிதுனம்

                                        இவைகளை  கண்டிப்பாக  சேர்க்க கூடாது. 

சமசப்தமத்திலும்  சேர்க்க கூடாத கூட்டு  பின் வருமாறு :

                               மகரம்              ---       கடகம் 

                               கும்பம்             ---        சிம்மம் 

பின் வருகின்ற  கூட்டில்  5-9 என்கிற தோஷமில்லை.

                                மேஷம்   ---   சிம்மம் 
                 
                                 கடகம்    ---     விருச்சிகம் .

என்னை பொறுத்தவரையில் 5-9-10-11-ம் ராசி சேர்க்கலாம்.

அடுத்தபடியாக 4-ம் ராசி சேர்க்கலாம்.

இனி அடுத்த பகுதியில் ராசியாதிபதி பொருத்தம் பற்றி பார்ப்போம் ..

                                                                  __________
 


No comments:

Post a Comment