Saturday, December 29, 2012

சுலப வழியில் திருமணப்பொருத்தம் -9

                                
                                         சுலப வழியில் திருமணப்பொருத்தம் -9

                                                             பொருத்தம்-9

அடுத்து நாம் பார்க்க போகிற பொருத்தம் மிக முக்கியமான பொருத்தம்.

ரஜ்ஜு பொருத்தம்..


ஒவ்வொரு நக்ஷத்திரதிற்கும்  ஒரு ரஜ்ஜு உண்டு. ஆண் , பெண்  

இருவருடைய ரஜ்ஜுவும்  ஒரே  ரஜ்ஜுவானால்  பொருந்தாது .

வேறு வேறு ரஜ்ஜுவாக அதுவும் இரண்டு பேருடைய ரஜ்ஜுவும்

ஆரோகனதிலோ அல்லது அவரோகனத்திலோ வேறு வேறு ரஜ்ஜுவாக

இருக்கவேண்டும்.கீழ் வரும் அட்டவணையில் தெளிவாக புரியும்.

             நக்ஷத்திரம்                   ஆரோ /அவரோ                  ரஜ்ஜு 
____________________________________________________________________________
அஸ்வினி -மகம் -மூலம்          ஆரோகணம்                   பாதம் 

ஆயில்-கேட் ரேவதி                     அவரோகணம்              பாதம் 
____________________________________________________________________________

பரணி -பூரம்-பூராடம்                     ஆரோகணம்                 ஊரு 

பூசம் -அனுஷம்-உத்திரட்              அவரோகணம்            ஊரு 
_____________________________________________________________________________

கார்த்தி-உத்திரம் -உத்திராடம்      ஆரோகணம்             நாபி 

புனர்வசு -விசா -பூரட்டாதி               அவரோகணம்         நாபி 
______________________________________________________________________________

ரோகிணி -ஹஸ்தம்-திருவோ       ஆரோகணம்          கண்ட 

திருவா -சுவாதி -சதயம்                        அவரோகணம்     கண்ட 
_____________________________________________________________________________

மிருக -சித்தி -அவிட்டம்                             -----------                   சிரோ 

____________________________________________________________________________

ஆண் ,பெண்  இருவருக்கும் ஒரே ரஜ்ஜு இல்லாமல் இருக்கவேண்டும்.

அப்படி வேறு வேறு ரஜ்ஜுவாக இருந்தாலும்  அவை இரண்டும்

ஆரோகனத்திலோ அல்லது அவரோகனத்திலோ வேறு வேறு ரஜ்ஜுவாக

இருந்தால் உத்தமம் .அன்றி வேறு வேறு ரஜ்ஜுதான்  ஆனால்  இரண்டும்

ஆரோகணத்தில் ஒன்று வேறு  ரஜ்ஜுவாகவும்  மற்றது  அவரோகணத்தில்

வேறு ரஜ்ஜுவாக  இருந்தால் சேர்க்கலாம் மத்யம  பொருத்தம் என்று சிலர்

கூறுவார்கள்.

இந்த பொருத்தம் 10 பொருத்தங்களில் மிக முக்கிய பொருத்தமாகும்.எனவே

இதை கவனமாக பார்க்க வேண்டும்.

நாம் ஏற்கனவே சொல்லியதுபோல் இந்த மிருக-சித்திரை-அவிட்டம் 

கண்டிப்பாக ஒன்றுக்கொன்று சேர்க்ககூடாது .

அடுத்த   பகுதியில் 10-வது பொருத்தமான நாடி பொருத்தம் பற்றி பார்ப்போம்.


                                                       ________________________


No comments:

Post a Comment