Friday, December 14, 2012

சுலப வழியில் திருமண பொருத்தம் -3

பொருத்தம்-3


                             சுலப  வழியில்  திருமண  பொருத்தம் 

                                        மா ஹேந்திர பொருத்தம்


நக்ஷத்திர பொருத்தம் ,அடுத்து,கண பொருத்தம்  ஆகிய  இரண்டும்  நன்கு

அமைந்து  விட்டது  என்றால்  அடுத்து மா ஹேந்திர  பொருத்தம்  எப்படி

அமையும்  என்பதை  சுருக்கமாக  இங்கு  பார்ப்போம் .


                                     பெண்   நக்ஷத்திரம்  முதல் ஆண் நக்ஷத்திரம் வரை எண்ணி

வந்தது 1,4,7,10,13,16,19,22,25 ஆனால்  பொருத்தம் உள்ளது.


பொதுவாக  5-ம்  இடத்தில தோஷம்  இல்லாமல்  இருக்கவேண்டும் .

5-ல்  ராகு ,கேது,அல்லது சனி நின்றால்  புத்திர  தோஷம் . ஆனால்  இந்த

மாகேந்திர  பொருத்தம்  இருந்தால் தோஷம் இல்லை ,விதி  விலக்கு  என்பது

அனுபவமே .

ஆண் , பெண்  இருவருடைய  ஜாதகத்தில்  ஒருவருக்கு  மட்டும்  5-ம்  இடம் 

தோஷம்  இருந்து  மற்றவருக்கு  5-ம்  இடம் தோஷம் இல்லை ,ஆனால்

இருவருக்கும் மாஹேந்திர  பொருத்தம்  இருந்தால்  ஜாதகம்

மறுபரிசீலனை  செய்ய  வேண்டும்.


                        மீண்டும்  ஒருமுறை சொல்கிறேன் ,மிருகசீரிஷம் ,

சித்திரை,அவிட்டம்- -ஆண் பெண் ஜாதகங்களை  கண்டிப்பாக  சேர்க்க

கூடாது.

பூர்வ  புண்ய ஸ்தானம்  என்கிற  5-ம்  இடத்தை  சுப  கிரகங்கள்  பார்த்தால்

குழந்தை  உண்டு.

பெண்   நக்ஷத்திரம்  முதல் ஆண்  நக்ஷத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 -வதாக

இருந்தால் புத்திர  பாக்கியம்   உண்டு  .5-ம் வீட்டில்  தோஷ  கிரகங்கள்

இருந்தாலும் நன்மையை  கொடுக்கும்  என்று  ஜோதிடம் சொல்கிறது.

5-ம்  இடமும் தோஷமாக  இருந்து  மா ஹேந்திர  பொருத்தமும்  இல்லை

என்றால்  அந்த  ஜாதகங்களை  சேர்க்க  கூடாது.

இனி  அடுத்த அத்தியாயத்தில்  ஸ்திரீ  தீர்க்கம்  பற்றி  பார்போம்.








No comments:

Post a Comment