முதல் அத்தியாயம்
பொருத்தம் பற்றி முதலில் ஆராயும் முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானவை பற்றி சில வரிகள் .
- ஆண் ,பெண் இருவர் ஜாதகத்திலும் லக்னம் நன்கு அமைய வேண்டும் .
- இரண்டாவது ,ஆண்களுக்கு 1,4,7,9,10-இடங்கள் நன்கு அமைய வேண்டும்.
- பெண்களுக்கு 2,5,8,12 இடங்கள் நன்கு அமைய வேண்டும்.
- சொந்த வீடு ,உச்ச வீடு ,நட்பு வீடு-இங்கே உள்ள .கிரகங்கள் பலமானவை
- பகை ,நீச்ச வீட்டில் உள்ள கிரகங்கள் பலம் குறைந்தவை .
- ஒருவர் ஜாதகத்தில் 1,5,9 ஆகிய இடங்கள் திரிகோணம் என்று சொல்லப்படும் .
- 1,4,7,10 ஆகிய இடங்கள் கேந்திரம் என்று சொல்லப்படும் .
- மேற்கண்ட இடங்களில் பாவ கிரஹங்கள் அதிபதி ஆனால் மிகவும் பலம் பெற்று இருக்கும். சுப கிரகங்கள் அதிபதியாக இருந்தால் பலம் குறைந்து இருக்கும். இந்த வீடுகளில் சுப கிரகங்கள் அதிபதியாக இல்லாமல் தங்கி இருந்தால் மிகவும் பலமானவை .
- பொதுவாக கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் நல்லது செய்யக்கூடியவை .
மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சில வீடுகள் பற்றி பார்த்துவிட்டு பொருத்தம் பார்ப்பது பற்றி தெரிந்து கொள்வோம் .
No comments:
Post a Comment