Monday, December 3, 2012

சுலப வழியில் திருமண பொருத்தம்- முன்னுரை -2

                             சுலப வழியில் திருமண பொருத்தம் -2
                                     
அத்தியாயம் -2                         

. அடுத்து  2,8,5,11 இடங்கள்  பண பர வீடுகள் .

  3,6,9,12 இடங்கள் அபோக்லிம வீடுகள் .

  மேற்கூறியவைகள்  கேந்திரம்போல் பலமான இடங்கள்  இல்லை .

 அந்த  இடத்தில  உள்ள  கிரகங்களை  பொறுத்து  பலம்  கூடும் /குறையும் .

 3,6,10,11 இடங்கள்   உபய  சய வீடுகள் .இங்கே  பாவ  கிரகங்கள் பலமானவை .

 அதாவது  இங்கே  அவை  தங்குவது  நல்லது . சொந்த  வீடாக  அமைவது

  நல்லது இல்லை.  பொதுவாக உபய  சய   வீடுகள்  நல்லவை .

 அடுத்து  பன்னிரெண்டு  ராசிகளும்  முறையே  சர ,ஸ்திர ,உபய  ராசிகள்

 என்று மூன்றாக பிரித்து கூறுவார்கள் .அதன்படி மேஷம் ,கடகம் ,துலாம் ,

 மகரம்  என்ற   நான்கு ராசிகள்  சர  ராசிகள்  என்று  அழைக்கப்படும்.

 ரிஷபம்,சிம்மம், விருச்சிகம் ,கும்பம்  இவை  நான்கும்  ஸ்திர  ராசிகள்

 என்று அழைக்கப்படும்.

 மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம்  இவை நான்கும்  உபய  ராசிகள்.

ஆக சர ராசியில்  பிறந்தவர்களுக்கு  11 வது  இடம்  பாதக ஸ்தானம் .

அது போல ஸ்திர ராசியில்  பிறந்தவர்களுக்கு 9 வது இடம் பாதக ஸ்தானம் . 

அது  போல உபய ராசியில் பிறந்தவர்களுக்கு  7 வது  இடம் பாதக  ஸ்தானம் 

(11,9,7 என்று  அவரவர் பிறந்த  லக்னத்திலிருந்து  எண்ண  வேண்டும் .)

அடுத்து  6,8,12 வது  இடங்கள்  நாச ஸ்தானங்கள்  என்று  சொல்லப்படும்.

இந்த வீடுகளுக்கு  அதிபதிகளாக  உள்ள கிரகங்கள்  சாதாரணமாக  நல்லவை

அல்ல

அடுத்து  வரும்  அத்தியாயத்தில் எந்த  ராசி  யார்  யாருக்கு சொந்த ,உச்ச ,

நீச வீடுகள்  என்று  பார்ப்போம் .

.


No comments:

Post a Comment