சுலப வழியில் திருமண பொருத்தம் -7
பொருத்தம்-=7
முன் அத்தியாயத்தில் கூறியபடி அடுத்து நாம் பார்க்க வேண்டிய பொருத்தம்
ராசியாதிபதி பொருத்தம்.
ஜாதக பொருத்ததில் இந்த பொருத்தம் முக்கியமான பொருத்தங்களில்
ஒன்றாகும்
இந்த பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் , பெண் ஜாதகத்தில் ஆண்
ஜாதகத்தில் அவருடைய ராசிக்கு அதிபதியாக உள்ள கிரகம் பெண்
ஜாதகத்தில் அந்த பெண்ணின் ராசிக்கு அதிபதியாக உள்ள கிரகம்
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று நட்பு அல்லது .சமமாக
இருக்கவேண்டும் .
இரண்டு பேருடைய ராசிக்கும் அதிபதியான கிரகம் நட்பு,
சமம் ------- நட்பு
நட்பு ------- சமம் ---- என்று வருமானால் உத்தமம்.
அன்றி ,
பகை ------- நட்பு ---- என்று வருமானால் மத்யமம்
சமம் -------- பகை ---- என்று வருமானால் தவிர்க்கவும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் சொந்த வீடு என்று ஒன்று உண்டு..
இதை நாம் அத்தியாயம் -3 -ல் குறிப்பிட்டு இருந்தோம் ,வாசகர்கள்
தற்பொழுது நினைவு படுத்திக்கொள்ளவும்.
அதன்படி உதாரணத்திற்கு ஒன்று கூறி புரிய வைக்கிறேன் .
ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கிரகம் நிற்கின்ற இடம்
அவருடைய ஜனன ராசி என்று சொல்வோம் .
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மேஷத்தில் இருந்தால் ,அந்த
மேஷமே அவருடைய ஜனன ராசி என்று சொல்லப்படும் . அத்தியாயம் -3-ல்
குறிப்பிட்டது போல் செவ்வாய் கிரகத்திற்கு ஆட்சியான வீடு ( அதிபதிவீடு )
மேஷம்,விருச்சிகம் .ஜனன காலத்தில் சந்திரன் மேஷத்தில்
இருந்தால்
உங்கள் ராசி மேஷம் ,அதன் அதிபதி அல்லது ஆட்சி கிரகம் செவ்வாய் .
இதுபோல் ஆண் , பெண் இருவருடைய ஜாதகத்தில் அவர்களுடைய ராசி
அதன் அதிபதி யார் என்று தெரிந்து கொண்டபின் கீழே கொடுக்க பட்டுள்ள
அட்டவணை மூலம் ஆண் ,பெண் இருவருடைய ராசியாதிபதிகள்
நாம் மேற்கூறியவாறு நட்பு ,சமம் ,பகை எப்படி என்று பார்த்து பொருத்தம்
இருக்கிறதா இல்லையா என்று பார்த்து கொள்ளவும் .
_______________________________________________________________________________
கிரகம் நட்பு சமம் பகை
________________________________________________________________________________
சூரியன் சந் ,செவ்,குரு புதன் சுக்,சனி,ராகு,கேது
________________________________________________________________________________
சந்திரன் சூரி ,புத செவ் ,குரு,சுக்,சனி ராகு ,கேது
_________________________________________________________________________________
செவ் சூரி,சந் குரு,சுக்,சனி புதன்,ராகு,கேது
_________________________________________________________________________________
புதன் சூரி, சுக் செவ்,குரு,சனி, சந்திரன்
ராகு,கேது
________________________________________________________________________________
குரு சூரி,சந் ,செவ் சனி,ராகு,கேது புதன் ,சுக்
_______________________________________________________________________________
சுக்கிரன் புதன் ,சனி,ராகு, செவ்,குரு சூரி ,சந்
கேது
_________________________________________________________________________________
சனி புத ,சுக்,ராகு,கேது குரு சூரி,சந்,
செவ்
_________________________________________________________________________________
ராகு சனி,சுக் புதன் ,குரு சூரி,சந்,
செவ்
______________________________________________________________________________
கேது சனி,சுக் புதன் ,குரு சூரி,சந்,
செவ்
_________________________________________________________________________________
சுருக்கமாக சொன்னால் பெண்ணின் ராசிக்குரிய அதிபனும்,ஆணின்
ராசிக்குரிய அதிபனும் ஒருவருக்கொருவர் நட்பாகவோ அல்லது
சமமாகவோ இருக்கவேண்டும். அன்றி பகையாக இருந்தால் பொருத்தம்
இல்லை .
அடுத்த அத்தியாயத்தில் வசியப்பொருத்தம் பற்றி பார்ப்போம் .
_____________________
No comments:
Post a Comment