Tuesday, December 18, 2012

சுலப வழியில் திருமண பொருத்தம்-4

 பொருத்தம்-4     



                              சுலப  வழியில்  திருமண  பொருத்தம் 
                                                         
                                                           4. ஸ்திரீ  தீர்க்கம் 

பொருத்தத்தில்  நான்காவதாக  வருவது ஸ்திரீ  தீர்க்கம்  என்னும்

பொருத்தம்.

பெண்  நக்ஷத்திரம் முதல் ஆண் நக்ஷத்திரம் வரை எண்ணி வந்தது

13-க்கு  மேல்  இருந்தால் . உத்தமம்.

7-க்கு  மேல் இருந்தால்  மத்யமம் .

ஒவ்வொருவர்  ராசிக்கும்  5-வது  ராசி  நன்கு அமைந்தால்  ஸ்திரீ

தீர்க்கம்  நன்கு அமையும் .

பெண்  நக்ஷத்திரம்  முதல் ஆண்  நக்ஷத்திரம்  9-தை  தாண்டி  இருந்தால்

சேர்க்கலாம்  என்பது  ஒருசிலர்  கருத்து .

பெண்  நக்ஷத்திரம் முதல் ஆண் நக்ஷத்திரம் 7-க்கு  மேல் இருக்க

வேண்டியதன் காரணம்   பெண்ணிற்கு 71/2 சனி  நடக்கும்  சமயம்  ஆணிற்கு  

71/2 சனி  நடக்காமல்  இருக்குமாறு  பார்த்து  கொள்ளவே  இவ்வாறு

கூறப்பட்டுள்ளது .

கணவன் மட்டும்  அல்லாமல் ,கணவன் வீட்டில் உள்ள அனைவரும்

வீட்டிற்கு  வந்த பெண்ணிடம் அன்போடும்  அனுசரணையாக  இருக்கும்

பொருட்டே  இநத  பொருத்தம்  கூறப்பட்டுள்ளது .

                                                          ---------------



No comments:

Post a Comment