Wednesday, December 12, 2012

சுலப வழியில் திருமண பொருத்தம்-2

பொருத்தம்-2


                               சுலப வழியில் திருமண  பொருத்தம்-5

                                                    2.கணப்பொருத்தம் 

நக்ஷத்திரங்கள்  மூன்று  வகையாக  பிரிக்கப்படுகின்றன .அவை  முறையே

தேவ கணம் ,மனுஷ  கணம்,.ராக்ஷச கணம்  ஆகும் .

தேவ கணத்தில் பிறந்தவர்கள்  உயர்ந்த  எண்ணங்களோடும் ,நல்ல

செயல்களோடும் இருப்பார்கள்.

மனுஷ கணத்தில் பிறந்தவர்கள் ,பிறருடன்  அனுசரித்து  போவார்கள் .

மனிதனுக்கு  உண்டான  அனைத்து  குணங்களும்  பொருந்தியவராக

இருப்பார்கள் .

ராக்ஷஸ  கணத்தில்  பிறந்தவர்கள் பிறரிடம்  அனுசரித்து  போக

மாட்டார்கள் .அடிக்கடி  ஆத்திரப்படுவார்கள் .

தேவகணம்  என்று சொல்லப்படும்  நக்ஷத்திரங்கள் :-

அசுவதி, மிருகசீரிஷம் , புனர்வசு, பூசம், ஹஸ்தம், சுவாதி , அனுஷம்,

திருவோணம், ரேவதி.


மனுஷ கணம்  என்று சொல்லப்படும் நக்ஷத்திரங்கள்:-

பரணி,  ரோஹிணி , திருவாதிரை, பூரம், உத்திரம் ,  பூராடம், உத்திராடம் ,

பூரட்டாதி , உத்திரட்டாதி .


ராக்ஷஸ  கணம் என்று சொல்லப்படும்  நக்ஷத்திரங்கள் :- 

கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம்,

அவிட்டம், சதயம் .


ஆண் , பெண்  இருவருக்கும்  ஒரே  கணமானால்  உத்தமம் .

தேவகணம் -மனுஷ கணம்  என்றால்  மத்யமம் .

ராக்ஷஸ  கணம் -தேவ கணம் என்றால்  சேர்க்ககூடாது. 

மனுஷ கணம் -ராக்ஷச கணம் -- ம்ருத்யு -சேர்க்ககூடாது.

பெண்  ராக்ஷஸ  கணம் -ஆண்  தேவ  அல்லது மனுஷ  கணம் 

என்றால்  சேர்க்ககூடாது.  இதில்  பெண்  நக்ஷத்திரம்  முதல் 

ஆண்  நக்ஷத்திரம்  14-க்கு  மேல்  இருந்தால்  பெண்  ராக்ஷஸ 

கணமானாலும்  தோஷமில்லை ,சேர்க்கலாம்.

குறிப்பாக  மனுஷ கணத்திலோ ,அல்லது தேவ கணத்திலோ

பிறந்த பெண்ணை   ராக்ஷச கணத்தை  தவிர்த்து  இதர  இரு

கணங்களில்  உள்ள  நக்ஷத்திரங்களுக்கு  சேர்த்தால்  குடும்ப

வாழ்க்கை  நன்மை  பயக்கும் .

                                                     ------------------






No comments:

Post a Comment